Sunday, February 14, 2016

காரைக்கால் அம்மையார்


காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார்.
இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். [சான்று தேவை] அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். [சான்று தேவை] இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன. இவருக்கென காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காரைக்கால் அம்மையார்
காரைக்கால் அம்மையார்
பெயர்:காரைக்கால் அம்மையார்
குலம்:வணிகர்
காலம்:கி.பி. 300-500
பூசை நாள்:பங்குனி சுவாதி
அவதாரத் தலம்:காரைக்கால்
மு

இளமைக் காலம்

முற்காலத்தில் காரைவனம் எனப்பட்ட மாநகர், தற்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது. இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வைசிய குடும்பத்தில் பிறந்தார். அவர் இறைவர்பால் நிலைபெற்ற அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்ந்தார்.

இல்லறம்

பெற்றோர் திருமணப்பருவம் வந்ததும் தகுந்த வரன் தேடினர். நட்பு முறையிலான உறவினராகிய காரைக்கால் மாநகரை அடுத்த நாகைப்பட்டினத்தில் காசுக்கடை(jewelery) வைத்திருந்த பரமதத்தன் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர்

ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்கு கொடுத்து விட்டார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவுவேண்டி வந்தார். அவரை வரவேற்று அமர செய்தார் அம்மையார். மத்திய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு பல வகை பத்தார்தங்கலுடன் அன்னம் பரிமாறிய அம்மையார்,சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்து சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். "மெய் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே " அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவனுக்கு படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப் பெண் என்று கருதினார். உடனுறையத் தனக்குத் தகுதியின்மையால் தான் அவரை விட்டு நீங்கிவிடுதல் வேண்டுமென்னும் முடிவில் அவரை நீங்கத் துணிந்தான். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களும் பொருந்துவனவற்றை நிரம்ப ஏற்றிக்கொண்டு கடலின்மீது பயணமாகச் சென்றான்.
காரைக்கால் அம்மையார் திருக்கோயில்

பெறுதற்கரிய பேய் வடிவு பெறுதல்

பின்னர் பரமதத்தன் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார்.சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். பாண்டி நாட்டில் பரமதத்தன் இருக்கும் நகருக்கு வெளியே உள்ள ஒரு இடத்தில் தங்கி, அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். இவர்கள் தெய்வத்தன்மை உடையவர்கள், அதனால் தான் காலில் விழுந்தேன். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள் என்று கூறினான். அதன் பிறகு "கணவருக்காக தாங்கிய உடல் நீங்கி, இறைவரைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடியேனுக்கு நற்பாங்கு பொருந்த அருளவேண்டும்" என்று இறைவனிடம் வேண்டி நின்றார். தாம் வேண்டிய அதனையே பெறுவாராகி உடம்பில் தசையும் அதனை இடமாகக்கொண்டு அடைந்த அழகுகளும் ஆகிய இவை எல்லாவற்றையும் உதறி, அனைவரும் வணங்கும் சிவபூதகண வடிவம் பெற்றார்.

கயிலாயம் செல்லல்

காரைக்கால் அம்மையார் பேயுருவச் சிலை
அம்மையார் இறைவனைக் காணக் கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் சென்றார். கயிலையில் இறைவனுடன் இடங்கொண்டு அமர்ந்திருந்த பார்வதி அம்மை, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க "நம்மைப் பேணும் அம்மை காண்" எனக் கூறி "அம்மையே வருக" என்றழைத்து "வேண்டுவன கேள்" என விளித்தார்,அதற்கு அம்மையார் "பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க" என்றார்.அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார்.

மாங்கனித் திருவிழா

காரைக்கால் அம்மையார் இறைவனிடமிருந்து பெற்ற மாங்கனி நிகழ்வை நினைவு கூறுமுகத்தான், காரைக்கால் கோயிலில் மாங்கனி திருவிழா இன்றளவும் ஆனி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

எழுதியுள்ள நூல்கள்

காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். [சான்று தேவை] மேலும் இறைவனை இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே இணைந்து "காரைக்கால் அம்மையார்" என்று அறியப்படும் இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.

இறைவனின் பெயர்கள்

தனது பாடல்களில் இறைவனுக்கு பல பெயரிட்டு வழங்குகிறார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், என் நெஞ்சத்தான், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன். ஆனால் சைவ சமயம் என்ற சொல்லுக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லே அம்மையாரது பாடல்களில் எங்கும் காணப்படுகிறது.க்தித் தலம்:
திருவாலங்காடு



 

karaikal groups

3/06/2017, 00:47 - Messages to this group are now secured with end-to-end encryption. Tap for more info.
04/06/2017, 00:45 - Kari Swaminathan: IMG-20170604-WA0000.jpg (file attached)
04/06/2017, 22:23 - ‪+91 94861 06093‬: *பக்தகாட்சி* 
*தேவலோகத்தை வேண்டாம் என்று கூறி திருவாரூரை ஆள வந்த தியாகேசரை, குபேரன் தனது நாடான குபேரபுரியை ஆளவருமாறு பணிந்தான்*.
      குபேரபுரி செல்ல மனமில்லாமல் திருவாரூரிலேயே இருக்க சித்தமானார் தியாகேசர். 
       குபேரன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே, நான் குபேரபுரியை ஆள வர வேண்டுமெனில் என்னுடைய நடனத்தின் ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் அளிக்கவேண்டும் என தியாகேசர் குபேரனிடம் கேட்க அவ்வாறே அளிப்பதாக குபேரன் ஒப்புக்கொண்டான்.             

முதலாம் பிரகாரத்தில் தியாகேசர் திருநடனம் புரிந்தபோது, ஒவ்வொரு அடிக்கும் ஒரு பொன் என குபேரன் தான் அணிந்திருந்த மொத்த நகைகளையும் அளிக்க நேரிட்டு பின் தன் மனைவி அணிந்திருந்த நகைகளையும் அளித்தான் .   இரண்டாம் பிரகாரத்திற்கு சென்ற போது தனது சேனைகள் அணிந்திருந்த அனைத்து பொன்களையும் பொருட்களையும் அளிக்க வேண்டியதாயிற்று . 
    மூன்றாம் பிரகாரத்திற்கு சென்று ஆரூர் பக்தர்களுக்கு நடனத்துடன் காட்சி அளித்துவிட்டு குபேரபுரி செல்லலாம் என தியாகேசர் குபேரனிடம் கூற குபேரனும் அவ்வாறே ஆகட்டும் என கூறினான். ஆனால் தியாகேசர் நீண்ட நெடியதும், காணக்கிடைக்காததும், கண்கொள்ளாததும், மெய்சிலிர்க்க வைப்பதும், அதிர்வலைகளை ஏற்படுத்துவதும், நொடிக்கு ஓராயிரம் அடிகளுடன் கூடியதுமாகிய தனது நடனத்துடன் பக்தர்களுக்கு காட்சியளிக்க, தியாகேசனின் அடுத்த அடிக்கு கொடுப்பதர்க்கு பொன், பொருள் ஏதும் இல்லாமல் குபேரபுரியின் செல்வக் கிடங்கு காலியாகி குபேரன் செய்வதறியாது திகைத்து நின்றான்.
   உடனே தியாகேசன் தோல்வியுற்ற *குபேரனிடம் இருந்து பெற்ற பொன், பொருள் என அனைத்தையும் பல மடங்காக்கி குபேரனிடம் அளித்து , குபேரபுரி சென்று நல்லாட்சி புரிந்திடுக* என ஆசி வழங்கி அனுப்பினார். பின் *ஆரூரில் இருப்பதே இன்பம்* என கூறி யதாஸ்தானம் சென்றார். 

இச்சம்பவத்தினை அனைவரும் அறிய வேண்டும் வகையில் ஆண்டுதோறும் தேரோட்டம் முடிந்து தியாகேசன் யதாஸ்தானம் செல்லும் முன் *பக்தகாட்சி உற்சவம்* நடைபெறுகிறது. இந்த பக்தகாட்சி உற்சவத்தை *திருவாரூர், விஜயபுரம் வர்த்தகர்கள், பக்தர்கள் என அனைவரும் ஒன்று கூடி சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் குபேரர்களாக இருந்து திருநடனத்துடன் காட்சி கொடுக்கும் தியாகேசனுக்கு பக்தியுடன் மலர்தூவி அளிக்கின்ற புஷ்பத்தில் பொன், வெள்ளி சேர்த்து அளிக்கிறார்கள் அவ்வாறு அளிக்கப்படும் பொன்னையும், பொருளையும் தியாகேசன் பலமடங்காக்கி பக்தர்களுக்கே திரும்ப அளித்து அருள் பாலிப்பான் என்பது ஐதீகம்*. 

*ஸ்ரீ தியகராஜ சுவாமிக்கு திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர்கள் உபயமாக நடைபெறும் 74 ம் ஆண்டு பக்தகாட்சி பெருவிழா* 05.06.2017 அன்று நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு நடைபெறும் *மகா அபிஷேகத்திலும்*, இரவு 9 மணிக்கு அ/மி தியாகராஜ சுவாமி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து *யதாஸ்தானம்* செல்லும் பெருவிழாவிலும்  அனைவரும் கலந்து கொண்டு அருள் பெற அழைக்கின்றோம்.
06/06/2017, 22:50 - RGKSWAMI: இது எங்கு குறிப்பு உள்ளது. மேற்கொள் இருப்பின் தரவும்
07/06/2017, 01:22 - Kari Swaminathan: சிங்கை அய்யா அவர்களுக்கு

அய்யா ஓர் சந்தேகம்

திருத்தூங்கானை மாட திருத்தலத்தில் நாவுக்கரச பெருமானுக்கு இடப குறியும், மூவிலை சூலத்தையும் நெருப்பில்  பழுக்க காய்ச்சி
  தானே  பொறித்தார்கள்

ஆனால்

இன்று அவ்வாறு செய்யாது பச்சை குத்துவது எவ்விதத்தில் சரி
07/06/2017, 02:41 - Kari Swaminathan: இதை விடுங்க

அறிவே சிவமான மணிவாச பெருமானை யாரிடமும் ஒப்பிட்டு பேச இயலாது

ஆதலால் தான் அடியார்களின் வரிசையில் அவரை வைக்கவில்லை

இவ்வாறு இருக்கையில்
👇🏻👇🏻

தற்போது உள்ள சாதாரண மானிடர் ஒருவரை மணிவாசக பெருமானிடம் ஒப்பிட்டு இக்கால மணிவாசகர் என்று அழைக்கின்றார்களே! இது சைவநெறிக்கே இழுக்கு இல்லையா?

விபரம் அறியாது தொண்டர்களே இந்த வேலையை செய்திருந்திருந்தாலும் இவ்வாறு செய்ய கூடாது தவறு என்று அந்தமனிதர் எடுத்து கூறியிருக்கனுமே!

அதுவும் கூறவில்லை!
அப்புறம் திருவாசகம் பாடுவது 

மாலை மரியாதைகளுக்கும் புகழுக்கும் ஆசைப்படு தானே!
07/06/2017, 02:41 - Kari Swaminathan: மாணிக்கவாசகர் மாலைக்கும் புகழுக்குமா ஆசைபட்டா திருவாசத்தை  பாடினார்?

எத்தனை முறை திருவாசகத்தை பாடினாலும் இன்னும் அந்த பக்குவம் வரவில்லையே அந்த மாமனிதருக்கு
07/06/2017, 02:45 - Kari Swaminathan: தருமபுரம் அய்யா அவர்கள்

அடிகடி கூறும் வார்த்தை

தற்போது உள்ள சைவர்கள்  அனைவரும் சைவர்கள் அல்ல! 'சைபர்கள்' என்று

நாமும் அப்படிதான் உள்ளோம்
07/06/2017, 02:50 - Kari Swaminathan: அயோக்கியனை போய் தேவாரத்தில் வைத்து பாடுவார்களா அருளாளர்கள்? கண்டிபாக இராவணன் நெறிதவறாதவனாக தான் இருந்திருக்க வேண்டும்

இராவணனை எப்படி தவறாக சித்தரித்து உள்ளார்கள்
👆🏻👆🏻 இது போல தான் நாம் நம் அறியாமையின் காரணமாக
சைவநெறியில் உள்ள பலவற்றை இழந்துகொண்டு இருக்கின்றோம்
07/06/2017, 02:58 - Kari Swaminathan: பனிரெண்டாம் நூற்றாண்டில் கம்பராமாயனத்தை  மொழிபெயர்ப்பு செய்து தமிழ் கலாச்சாரத்திற்கு  ஏற்ப சிலகாட்சிகளை மாற்றி எழுதி கம்பருக்கு
திருமுறைகளில் உயர்வாக வைத்து பேசப்பட்டுள்ள இராவணனை பற்றி கண்டிபாக தெரிந்திருக்க வேண்டும்!

ஏன் கம்பன் வேறுபடுத்தி காட்டவில்லை?
07/06/2017, 09:07 - RGKSWAMI: நீங்க கேட்கிற கேள்விய பார்க்கும் போது. ஒரு விளம்பரம் ஞாபகம் வருகிறது. *இங்கு போலி வேடதாரிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்*என்பதே
அப்பர் பெருந்தகைக்கு அன்று நடந்தது வேற்று சமயத்தில் தான் தஞ்சம் புகுந்தது தவறுன்னா மூவிலையை பொறி என்றார். 
படிச்சவன் பாட்டை கெடுத்தான் எழுதுனவன் ஏட்டக் கெடுத்தான் என்கிறவாறு சில அதிபுத்திசாலிகள் நடந்துகிறார்கள்

இதிலிருந்து என்ன தெரியுதுன்னா

1)தான் அப்பருன்னு இவர்கள் எல்லாரும் நினைக்கிறார்களோ?
2)ஒரு வேளை சூலம் பொறித்தவர்கள் (மன்னிக்கவும் குத்தியவர்கள்)வேற்று சமயத்தில் இருந்து வந்தவர்களோ?
3)அந்த மனசன் சமூகத்திற்கு எவ்வளவோ நல்லது செய்திருக்காரு அதையெல்லாம் இவங்க செய்ய மாட்டாங்க. எங்க கோயிலை ஏன்டா ஆக்கிரம்மித்திருக்கேங்கன்னு அற வழியில அப்பர் பெருமகான் போராடினாரு. 

இது போல நிறைய
எதுக்கு இதையெல்லாம் சிந்திக்கிட்டு இதையெல்லாம் கொன்னா நம்மள பைத்தியன் என்பாங்க.

எதையும் சிந்திக்கவும் மாட்டாங்க. சொந்தம்மா சிந்திக்கவும் மாட்டாங்க
.
*ஆக மொத்தத்தில செம்மறி ஆட்டுக்கூட்டமாயிட்டுது*
10/06/2017, 17:35 - ‪+91 94861 06093‬: புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே;
புத்த னார்தலை தத்தெனத் தத்துமே;
கனலில் ஏடிடப் பச்சென்(று) இருக்குமே;
கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே;
பனையில் ஆண்பனை பெண்பனை ஆக்குமே;
பழைய என்புபொற் பாவைய தாக்குமே;
சிவன ராவிடம் தீரெனத் தீருமே;
செய்ய சம்பந்தர் செந்தமிழ்ப் பாடலே.
10/06/2017, 17:35 - ‪+91 94861 06093‬: AUD-20170610-WA0023.amr (file attached)
10/06/2017, 18:05 - RGKSWAMI: திருச்சிற்றம்பலம்
பாடலுக்கான ஆசிரியரை மறப்பது நாம் இழைக்கும் பெரும் பிழை 
எத்தளையோ தலைமுறையை இழந்து தவிக்கும் நம் சமயம் இத்தலைமுறையிலாவது வாழ வகை செய்வோம்.
பல தடவை யாம் சுட்டிக்காட்டியும் இக்குழுவினர் இதை செய்யும் கால் தயவு செய்து எமக்கு இக்குழுவினர் வழிவிட்டு ஓய்வு தாருங்கள்
நன்றி
10/06/2017, 18:48 - ‪+91 94861 06093‬: பிழை பொறுத்தருள்க.
10/06/2017, 18:49 - ‪+91 94861 06093‬: சிதம்பர முனிவர் அருளிய நால்வர் அற்புத மாலையின் முதல் பாடல்.
10/06/2017, 19:50 - ‪+91 94861 06093‬: *தெய்வச்சேக்கிழார் பெருமான் அருளியுள்ள பெரிய பிராணம்.*

வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க 
பூதப் பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற் புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
🌺🌺🌺🌺🌺🌺🌺
10/06/2017, 19:50 - ‪+91 94861 06093‬: AUD-20170610-WA0037.amr (file attached)
11/06/2017, 01:49 - Kari Swaminathan: IMG-20170611-WA0003.jpg (file attached)
14/06/2017, 23:29 - ‪+91 94861 06093‬: IMG-20170615-WA0021.jpg (file attached)
17/06/2017, 21:07 - ‪+91 94861 06093‬: சிவாயநம 

திருச்சிற்றம்பலம் 

நந்தியெம்பெருமான்  சிவனிடம் வேண்டி பெற்ற வரம் 


1. மறைகள் நிந்தனை, சைவ நிந்தனை, பொறா மனமும் 

2. தறுகன் ஐம்புலன்களுக்கு, ஏவல் செய்யுறாச் சதுரும் 

3. பிறவி தீதெனாப், பேதையர் தம்மொடு பிணக்கும் 

4. உறுதி நல்லறஞ், செய்பவர் தங்களோடு உறவும் 

5. யாது நல்லன்பர் கேட்கினும் உதவுறும் இயல்பும் 

6. மாதவத்தினோர் ஒறுப்பினும், வணங்கிடும் மகிழ்வும் 

7. ஓது நல்லுபதேச மெய் உறுதியும் 

8. அன்பர் தீது செய்யினும் சிவச்செயல் எனக்கொளும் தெளிவும் 

9. மனமும்,வாக்கும், நின் அன்பர்பால் ஒருப்படு செயலும் 

10. கனவிலும் உனது அன்பருக்கு அடிமையாங் கருத்தும் 

11. நினைவில் வேறொரு கடவுளை வழிபடா நிலையும் 

12. புனித நின்புகழ் நாள்தொறும் உரைத்திடும் பொழிவும் 

13. தீமையாம் புறச் சமயங்கள் ஒழித்திடும் திறனும் 

14. வாய்மையாகவே பிறர் பொருள் விழைவுறா வளனும் 

15. ஏமுறும் பர தார நச்சிடாத நன் நோன்பும் 

16. தூய்மை நெஞ்சில் யான், எனது எனும் செருக்குறாத் துறவும் 

துறக்கமீ துறையினும், நரகில் தோய்கினும் 
இறக்கினும், பிறக்கினும், இன்பம் துய்க்கினும் 
பிறைக்கொழுந் தணிசடைப் பெரும் இவ்வரம் 
மறுத்திடாது எனக்கு நீ வழங்கல் வேண்டுமால் 

என்று நந்தியெம்பெருமான் திருவையாறு என்ற தலத்தில் ஐயாற்றெம்பெருமானிடம்  நாம் உய்வடைவதற்காக வேண்டிப் பெற்ற பதினாறு பேறுகள் ( 16 செல்வங்கள்)  ஆகும்.
17/06/2017, 22:05 - ‪+91 94861 06093‬: http://thiruvaiyarushivasewasangh.blogspot.in
17/06/2017, 23:36 - ‪+91 94861 06093‬: Tidbits

குறுந்தகவல்


புராணங்களை இயற்றியவர்கள்




இங்கு சில புராணங்களும் அவற்றை இயற்றியவர்களின் பெயர்களும் கொண்ட பட்டியல் இது.

1. இலிங்க புராணம் - வரகுண ராம பாண்டியர்
2. கூர்ம புராணம் - அதிவீர ராம பாண்டியர்
3. வினாவிடை புராணம் - புராணத் திருமலைநாதர்
4. தசபுராணம் - அப்பர்
5. சிவபுராணம் - மாணிக்கவாசகர்
6. அருணகிரி புராணம் - புராணத் திருமலைநாதர்
7. அருணகிரி புராணம் - மறைஞான சம்பந்தர்
8. அருணாசல புராணம் - சைவ எல்லப்ப நாவலர்
9. இறைசை புராணம் - புராணத் திருமலைநாதர்
10. சிதம்பர புராணம் - புராணத் திருமலைநாதர்
11. சுந்தரபாண்டிய புராணம் - அனதாரி
12. செவ்வந்தி புராணம் - சைவ எல்லப்ப நாவலர்
13. சேது புராணம் - நிரம்ப அழகிய தேசிகர்
14. திருக்காளத்திப் புராணம் - ஆனந்தக் கூத்தர்
15. திருச்செங்காட்டங்குடி புராணம் - சைவ எல்லப்ப நாவலர்
16. திருப்பட்டீசுரம் புராணம் - ரேவண சித்தர்
17. திருப்பரங்கிரிப் புராணம் - நிரம்ப அழகிய தேசிகர்
18. திருமழபாடி புராணம் - கமலை ஞானப் பிரகாசர்
19. திருமேற்றளி புராணம் - ரேவண சித்தர்
20. திருவலஞ்சுழி புராணம் - ரேவண சித்தர்
21. திருவாரூர்ப் புராணம் - அளகை சம்பந்த முனிவர்
22. திருவானைக்காப் புராணம் - கமலை ஞானப்பிரகாசர்
23. திருவிரிஞ்சைப் புராணம் - சைவ எல்லப்ப நாவலர்
24. திருவெண்காடு புராணம் - சைவ எல்லப்ப நாவலர்
25. திருவெற்றியூர்ப் புராணம் - திருவெற்றியூர் ஞானப்பிரகாசர்
26. திருவையாறு புராணம் - ஞானக்கூத்தர்
27. திருவையாறு புராணம் - நிரம்ப அழகிய தேசிகர்
28. தீத்தகிரி புராணம் - சைவ எல்லப்ப நாவலர்
29. வேணுவனம் புராணம் - நிரம்ப அழகிய தேசிகர்
30. கமலாலயப் புராணம் - மறைஞான சம்பந்தர்
31. சரப புராணம் - புராணத் திருமலைநாதர்
32. சைவமகா புராணம் - புராணத் திருமலைநாதர்
33. ததீசி புராணம் - புராணத் திருமலைநாதர்
34. திருத்தொண்டர் புராணம் - சேக்கிழார்
35. திருவிளையாடல் புராணம் - பெரும்பற்றப்புலியூர் நம்பி
36. திருமுறை கண்ட புராணம் - உமாபதி சிவம்
37. சேக்கிழார் புராணம் - உமாபதி சிவம்
38. கோயிற்புராணம் - உமாபதி சிவம்
39. மேருமந்தர புராணம் - சமய திவாகர வாமன முனிவர்
40. திருவாதவூர் அடிகள் புராணம் - கடவுள் மாமுனிவர்
41. விநாயக புராணம் - கச்சியப்ப முனிவர்
42. காஞ்சி புராணம் - சிவஞான முனிவர்
43. தேவயானைப் புராணம் - நல்லாப் பிள்ளை
44. அருணாச்சலப் புராணம் - சிவப்பிரகாச சுவாமிகள்
45. தணிகைப் புராணம் - கச்சியப்ப முனிவர்
46. சீறாப் புராணம் - உமறுப் புலவர்
47. அரிச்சந்திர புராணம் - வீரகவிராயர்
48. பெரிய புராணம் - சேக்கிழார்
49. புலவர் புராணம் - தண்டபாணி சுவாமிகள்
50. திருக்கழுக்குன்றப் புராணம் -அந்தகக் கவி வீரராகவ முதலியார்
19/06/2017, 01:11 - RGKSWAMI: திருச்சிற்றம்பலம்

சைல நெறி சார்ந்த அன்பர்கள் தேவைப்படும் வகையிருப்பின் கீழ் காணும் தகவலுக்கு ஏற்ப திருநீறு பெற்றுக் கொள்ளவும்


திருச்சிற்றம்பலம்  
 மீண்டும்  திருநீறு  சேவை  தொடங்கி  விட்டோம் 
அடியார்களுக்கு  சுத்தமான  வாசனையில்லாத நீறு அடியார் களுக்கு  விலையில்லாமல்  வழங்கி  வருகிறோம் தேவைபடும்  அடியார்  தங்கள்  முழு விலாசம்  பின் கோடு  மற்றும்  அலை பேசி எண்னை  பதிவு செய்யுங்கள் 
 சிவ ரவிச்சந்திரன் 
தொடர்புக்கு  9444339972
திருச்சிற்றம்பலம்

சென்னையில்  உள்ள  அடியார்கள் நேரில்  வந்து  பெற்று கொள்ளவும் 
சிவ ரவி சந்திரன்
  41/a  கண்ணகி தெரு  ஔவை நகர் சூளை மேடு  சென்னை 94  MMDA  bus teremanil back side  9444339972